அவர் பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் இருந்ததால்

இளமையான புகைப்படத்தை காட்டி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அசோக்குமார் உடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து மலேசியா திரும்பி சென்று அசோக்குமார் உடனான தொடர்பை துண்டித்து கொண்டார்.


அடுத்த சில நாட்களில் கவிதா அருணாசலம் என்ற பெயரில் அசோக்குமாருக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் தான் அமுதேஸ்வரியின் அக்கா என்றும், அவள் ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டாள் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளார்.


ஆனால் தான் தேனி வருவதாகவும் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி தேனியில் உள்ள தனியார் விடுதிக்கு அசோக்குமார் சென்றுள்ளார். அங்கு வந்திருந்தது அமுதேஸ்வரி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்துள்ளார்.


இதையடுத்து இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அமுதேஸ்வரியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதித்து பார்க்கையில் அதில் விக்னேஸ்வரி(45) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.