சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை வழக்கில் அவருடைய தந்தை மத்திய குற்ற பிரிவு அலுவலகத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மாணவியின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த தற்கொலை கடிதம் பெரும் அதிர்ச்சி வலையை ஏற்படுத்தியது. இதனால் தன்னுடைய மகளின் மரணம் தற்கொலை அல்ல பேராசியர்களின் நெருக்கடியால் அவர் இறந்துள்ளார் என்று பாத்திமாவின் தந்தை லத்தீப் தமிழக அரசிடம் புகார் அளித்தார்.
அதன் பிறகு இந்த வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான குழு பேராசியர்கள் ஹேமச்சந்திரன், சுதர்சன் பத்பநாபன், மிலிந்த் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
அதே சமயம் பாத்திமாவின் தந்தை, சகோதரிகள், கல்லூரி தோழிகள் என மாணவிக்கு நெருங்கிய வட்டாரங்களில் அவ்வப்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவியின் செல்போனை ஆய்வு செய்ய சென்னையிலுள்ள தடவியல் துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.