வைரல் போட்டோ

த்ருவ் ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. விக்ரம் எப்பொழுதுமே தனது ரசிகர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர். ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் ரசிகர்களை பார்த்தால் ஜாலியாக பேசுவார், செல்ஃபி எடுப்பார். இந்நிலையில் அவரின் மகனும் அவரை போன்றே ரசிகரிடம் அன்பாக நடந்து கொண்டுள்ளார். நடிப்பில் மட்டும் அல்ல குணத்திலும் த்ருவ் அப்பாவை போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.