அப்படியே அப்பா மாதிரி: த்ருவ் விக்ரம் செய்த காரியம் தெரியுமோ

ஆதித்ய வர்மா படம் மூலம் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாகிவிட்டார். படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும் த்ருவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. கோலிவுட்டுக்கு ஒரு திறமையான ஸ்டார் கிடைத்துவிட்டார் என்றார்கள் விமர்சகர்கள். த்ருவுடன் சேர்ந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக சில பிரபலங்களே தெரிவித்துள்ளனர்.


த்ருவ் விக்ரம்


தற்போது த்ருவ் செய்த காரியம் குறித்து தான் மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விக்ரமின் தீவிர ரசிகரான ஆட்டோ டிரைவர் ஒருவர் த்ருவை சந்தித்துள்ளார். தான் பெரிய நடிகரின் வாரிசு என்று பந்தா பண்ணாமல் த்ருவ் அந்த ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த ரசிகர் தன் ஆட்டோவில் விக்ரமின் ஸ்கெட்ச் பட புகைப்படத்தை ஒட்டி வைத்துள்ளார். த்ருவ் இப்படி பந்தா இல்லாமல் நடந்து கொண்டது ரசிகர்களை கவர்ந்துள்ளது.